கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-05-16 22:30 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் பாணாத்துறை பகுதியில் பாணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பாணபுரீஸ்வரர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 9-ந் தேதி வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

திருக்கல்யாணம்

கடந்த 13-ந் தேதி ஓலை சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பாணபுரீஸ்வரர், சோமகலாம்பிகை திருக்கல்யாணம் நடந்தது.

இதில் சோமகலாம்பிகை மற்றும் ஆடிப்பூர அம்மனுடன் அருள் பாலித்த பாணபுரீஸ் வரரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (வெள்ளிக் கிழமை) தேரோட்டமும், நாளை (சனிக்கிழமை) காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்