பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு, வீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது.

Update: 2019-05-16 22:30 GMT
பொன்னமராவதி,

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு, வீடாக பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. மேலத்தானியம், அண்ணாநகர், ஜே.ஜே.நகர், காமராஜ்நகர், கட்டையாண்டிப்பட்டி, பட்டமரத்தான்நகர் ஆகிய பகுதிகளில் பொன்னமராவதி ஒன்றிய ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இந்த கணக்கெடுப்புப் பணியை பள்ளி செல்லா குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப் பாளர் வீரப்பன் மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர். பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல்குவாரி, தொழிற்சாலைகள், விவசாயம் நடைபெறும் இடம், பஸ் நிலையம், உணவகங்கள், பழம், பூ, காய்கறி அங்காடிகள் ஆகிய பகுதிகளில் இச்சிறப்பு கணக் கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்