ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வருகிற 23–ந் தேதி நடக்கிறது. ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.

Update: 2019-05-17 23:15 GMT

ஆரணி,

ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

இதில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி வருவாய் கோட்ட அலுவலருமான மைதிலி தலைமை தாங்கி பேசினார். அப்போது, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சுற்றுக்கு 14 மேசை வீதம் 23 சுற்றுகள் வரை நடக்கும். உங்கள் பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியினர் யாரும் அழைத்தால் போகக்கூடாது. உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் என அறிவுறுத்தினார்

இதில் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், தாசில்தார் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்ட வழங்கல் அலுவலர் மணி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்