செஞ்சி அருகே, குட்டையில் மூழ்கி, தாய்- மகள் உள்பட 3 பேர் பலி

செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி, தாய்- மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2019-05-17 23:30 GMT
செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிரா மத்தை சேர்ந்தவர் இமாம். இவருக்கு 2 மனைவிகள். மூத்த மனைவியின் மகள் குலாசர்பேகம்(வயது 26). 2-வது மனைவியின் மகள் ஜமிலா(10). இவள், செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்தாள்.

குலாசர்பேகத்துக்கு திரு மணமாகி கணவர் ஜமில் அகமத் ஷாசிலுடன் பள்ளியம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார். இவருடைய மகள் பஸ்பின்(8). இவள், வடவானூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்தாள். மகன் ஷாகித்(3). பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் குலாசர்பேகம் தனது குழந்தை களுடன் நங்கிலிகொண் டானில் உள்ள தனது பெற் றோர் வீட்டிற்கு வந்திருந் தார்.

நேற்று மாலை 3 மணிக்கு குலாசர்பேகம் தனது 2 குழந் தைகள் மற்றும் தங்கையான ஜமிலாவுடன் குளிப்பதற்காக சங்கராபரணி ஆற்றில் உள்ள குட்டைக்கு சென்றார். அங்கு குலாசர்பேகம், துணி துவைத் துக்கொண்டிருந்தார். அப் போது பஸ்பின் குளிப்பதற்காக குட்டையில் இறங்கினார். குட்டையில் 10 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது.

நீச்சல் தெரியாததால் பஸ் பின் தத்தளித்தபடி, தண்ணீரில் மூழ்கினாள். இதை பார்த்த ஜமிலா, அவளை காப்பாற்றுவதற்காக குட்டை யில் குதித்தாள். அவளுக்கும் நீச்சல் தெரியாததால் ஜமிலாவும் மூழ்கினாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குலாசர்பேகம், இருவரையும் மீட்பதற்காக குட்டையில் இறங்கினார். ஆழமான பகுதிக்கு சென்ற அவரும், மூழ்கினார்.

அடுத்தடுத்து 3 பேரும் குட்டையில் மூழ்கியதை கரையில் இருந்தபடி பார்த்த ஷாகித், அழுதபடி ஓடிச்சென்று தனது தாத்தா இமாமிடம் கூறினான். உடனே அவர் அலறிய டித்துக்கொண்டு, தனது உறவினர்களுடன் குட்டைக்கு வந்து, தேடிப் பார்த்தார். அப்போது 3 பேரும் பிணமாக மீட்கப்பட் டனர். இதையடுத்து தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலியான 3 பேரின் உடல்களும் கரையில் வரிசையாக வைக்கப்பட்டன. இதை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளிக்க சென்ற தாய், மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

மேலும் செய்திகள்