பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2019-05-17 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்வதும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்தது. மதியம் 1.45 மணியவில் திடீரென கருமேங்கள் ஒன்றுகூடி மழை கொட்டி தீர்த்தது.

கப்பன்பார்க், சாந்திநகர், வில்சன் கார்டன், கோரமங்களா, ஹெப்பால், எம்.ஜி.ரோடு, ராஜாஜிநகர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் மழைநீர் புகுந்து பாதிப்புகளை உண்டாக்கியது.

காற்று பலமாக வீசியதால் வில்சன் கார்டன், ஜெயநகர், மல்லேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மழை காரணமாக சில்க்போர்டு, டெய்ரி சர்க்கிள், பன்னரகட்டா உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர். மழை காரணமாக நகரில் நேற்று குளிர்ச்சியான காற்று வீசியது.

மேலும் செய்திகள்