திருச்சி சேவை மையத்தில் பார்வையற்ற 2 காதல் ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையம் இயங்கி வருகிறது.

Update: 2019-05-20 22:30 GMT
திருச்சி,

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் பார்வையற்றோர், முதியோர், ஏழை மாணவ-மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி பயன்பெற்று வருகிறார்கள். மேலும் இசைக்குழுவையும் நடத்தி வருகிறது. இந்த மையத்தில் தங்கி உள்ள பார்வையற்ற சூசைராஜ் (வயது40)- தேவி(35) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதேபோல் திருப்பூரை சேர்ந்த பார்வையற்ற ராஜா(40)- ராதிகா(37) ஆகியோரும் காதலித்து வந்தனர். இதையறிந்த சேவை மைய நிர்வாகம், பார்வையற்ற 2 காதல் ஜோடிகளுக்கும் இலவசமாக திருமணம் நடத்திட ஏற்பாடு செய்தது. அதன்படி, நேற்று சேவை மையத்தில் 2 காதல் ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது. சேவை மைய நிர்வாக இயக்குனர் தாமஸ் வரவேற்று, மணமக்களை வாழ்த்தி பேசினார். இதில் நிர்வாகிகள் வசந்தகுமாரி மேகநாதன், புவனேசுவரி குணசேகரன், சித்ரா புவனேசுவரன், முருகாயி, விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

மேலும் செய்திகள்