அதிக சார்ஜ் ஏற்றும் பவர் பேங்க்

வெளியூர் பயணங்களின் போது அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களில் பவர் பேங்கும் ஒன்றாகிவிட்டது.

Update: 2019-05-22 07:05 GMT
பயணங்களின் போது அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களில் பவர் பேங்கும் ஒன்றாகிவிட்டது. இந்த ஹூகோநூயி பவர் பேங்க் ஸ்மார்ட் போன், டேப்லெட் மற்றும் யு.எஸ்.பி.- சி நோட்புக்ஸ் ஆகியவற்றுக்கு சார்ஜ் ஏற்ற பயன்படும். பொதுவாக ஒரு பவர் பேங்க் சார்ஜ் ஏற குறைந்தது 10 மணி நேரம் ஆகும்.

ஆனால் இந்த ஹூகோநூயி பவர் பேங்க் நான்கு மணி நேரத்திலேயே சார்ஜ் ஆகிவிடுகிறது. இது 10000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. உள்புறம் தரமான காப்பர் சுருள் பொருத்தப்பட்டுள்ளதால் வேகமாக மின்சாரத்தை கடத்தி சீக்கிரமாக நமது கருவிகளை சார்ஜ் செய்யும்.

அது மட்டுமின்றி சார்ஜ் ஏறியவுடன் தானாகவே பவர் ஆப் ஆகிவிடும். இதனால் தேவைக்கு அதிகமாக சார்ஜ் ஏறி நமது ஸ்மார்ட் கருவிகள் சூடு ஏறிவிடாமல் பாதுகாக்கிறது.

இதன் பின்புறத்தில் சாய்வாக வைக்கக்கூடிய ஒரு போன் ஸ்டாண்ட் இருப்பதால் நம் போனை இதில் வைத்து வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். மற்ற பவர் பேங்குகளை விட இருபத்துஐந்து சதவீதம் விரைவாக சார்ஜ் செய்யும் இதன் விலை ரூ.2,500.

மேலும் செய்திகள்