குறுவை சாகுபடியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

குறுவை சாகுபடியை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-05-22 22:00 GMT
திருவாரூர்,

சம்பா சாகுபடி என்பது இயற்கை இடர்பாடிற்கு உள்ளாகும் என்பதால், விவசாயிகள் குறுவை சாகுபடியை மட்டுமே பெரிதும் நம்பி உள்ளனர்்.

இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். இந்தநிலையில் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி மேற்கொள்ளலாம் என விவசாயிகள் நம்பியுள்ளனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கையை எடுக்காதது வேதனை அளிக்கிறது.

போதுமான தண்ணீர்

கர்நாடக அணைகளிலும், அங்குள்ள மற்ற நீர் நிலைகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. எப்படி இருந்தாலும் நடப்பு ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உரிய காலத்தில் திறந்துவிடுவது குறித்து கண்காணிப்புக்குழு கூடி ஆய்வு நடத்தி ஆணையத்துக்கு அறிக்கையாக கொடுத்திருக்க வேண்டும்.

இல்லையெனில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி உரிய உத்தரவை பிறப்பித்து தீர்ப்பின்படி இதுவரை வழங்கப்படவேண்டிய தண்ணீரை திறந்துவிட செய்திருக்க வேண்டும். ஆணையமும் அலட்சியம் காட்டும் நிலையில், தமிழக அரசு மேல் முறையீடு செய்திருக்க வேண்டும். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நடவடிக்கை

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க வேண்டிய அமைப்புகள் அனைத்தும் செயல்படாத நிலையில், குறுவை சாகுபடியை மேற்கொள்வதா, வேண்டாமா என விவசாயிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இதுவரை வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக தமிழகத்துக்கு திறந்துவிட ஆணையத்தில் அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டும். விவசாயிகள் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடியை தொடங்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்