தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி

ராமநாதபுரம் அருகே தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பாய்மரப் படகுப் போட்டி நடந்தது.

Update: 2019-05-25 22:15 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் தேவிபட்டினம் உலகம்மன் கோவில் படையாச்சி தெருவில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோவில் 34–வது ஆண்டு வைகாசி பொங்கல் விழா கடந்த 17–ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. எட்டு நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி விழா நடந்தது.

இதில், பெண்கள் உள்ளிட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முடிவில் பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் ஒரு படகிற்கு தலா 5 பேர் வீதம் 20 படகுகளில் 100 பேர் கலந்து கொண்டனர். தேவிபட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் போட்டியை தொடங்கி வைத்தார்.

வெற்றி பெற்ற படகு குழு வீரர்களுக்கு முதல் மூன்று பரிசு தொகையை தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நே‌ஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், கண்ணன், பா.ஜ.க. பிரமுகர் மகேந்திரன் மற்றும் ஆறுதல் பரிசு தொகையை தேவிபட்டினம் உலகம்மன் கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. படகு போட்டியை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்