சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்த முயன்ற ரூ.10 கோடி போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-26 00:00 GMT

மும்பை,

மும்பையில் இருந்து பெங்களூருக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சயானில் இருந்து பெங்களூரு செல்ல இருந்த சொகுசு பஸ்சில் ஏறி பயணிகளிடம் இருந்த உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ்சில் அமர்ந்திருந்த 3 பேரிடம் இருந்து பெசுடோபெரின் என்ற 25 கிலோ எடையுள்ள போதைப்பொருள் சிக்கியது. இவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதையடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருளுடன் சிக்கிய அஷ்ரப் அலி (வயது34), முகமது பையாஸ் (29), தமீம் அன்சாரி (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை எம்.டி. என்ற போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தி வருவதும், பெங்களூரு வழியாக சென்னைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்