நினைவு நாளையொட்டி மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு

நாகர்கோவிலில் மார்‌ஷல் நேசமணி நினைவு நாளையொட்டி நேற்று அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2019-06-01 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம், தாய் தமிழகத்தோடு இணைய நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மார்‌ஷல் நேசமணி. அதனால் இவரை குமரி மாவட்ட மக்கள் ‘குமரித்தந்தை’ என்று பாசத்தோடு அழைக்கிறார்கள். அவருடைய நினைவு தினம் நேற்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்‌ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ரேவதி தலைமை தாங்கி, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதில் மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் ஜெயசீலன், கண்ணன், சந்திரன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணிமண்டபத்தில் உள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைச் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சேக்தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு உள்ள மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் அசோக்ராஜ், ராஜதுரை, தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்