முக்கடல் அணையை வசந்தகுமார் எம்.பி. பார்வையிட்டார்

முக்கடல் அணையை வசந்தகுமார் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-06-05 23:00 GMT
பூதப்பாண்டி,

முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத குழாய்கள் மூலம் வடசேரி கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும். அங்கிருந்து குழாய்கள் மூலம் நாகர்கோவில் நகர மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு போதுமான அளவு மழை இல்லாததால் முக்கடல் அணை வறண்டது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று மைனஸ் 17.05 அடியாக இருந்தது. இதனால் நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பார்வையிட்டு ஆய்வு

இந்தநிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நேற்று முக்கடல் அணைக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக அமைக்கப்பட உள்ள புத்தன் அணை பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை கேட்டறிந்தார். பின்னர், அவர் நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு விரைவில் நீங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

வசந்தகுமார் எம்.பி.யுடன் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தோவாளை ஒன்றிய முன்னாள் தலைவர் பூதலிங்க பிள்ளை, ஆலிவர்தாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்