வேர்க்கடலையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் கருத்தரங்கில் கலெக்டர் ராமன் பேச்சு

வேர்க்கடலையை மதிப்பு கூட்டி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Update: 2019-06-07 23:00 GMT
வேலூர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து வேலூரில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு ஏலகிரி அரங்கில் நேற்று நடத்தியது.

கருத்தரங்கிற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட விற்பனை பிரிவு மேலாளர் ரூபன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ரெக்ஸ் வாஸ் கருத்தரங்கின் ேநாக்கமான வேர்க்கடலை பயிரில் எவ்வாறு லாபம் பெறலாம் என்பது குறித்து விளக்கி கூறினார்.

கருத்தரங்கை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த ஆண்டு வேளாண்மை துறையின் சார்பில் கூட்டுறவு பண்ணையம் திட்டம் வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. கூட்டுப்பண்ணையத்தின் முக்கிய குறிக்கோள் ஒவ்வொரு கிராமத்திலும் சிறு மற்றும் குறு விவசாயிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு 20 விவசாயிகள் அடங்கிய விவசாயிகள் ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். பின்பு 5 ஆர்வலர் குழு அடங்கிய 100 உறுப்பினர்கள் கொண்ட விவசாய உற்பத்திக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த விவசாய தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள் தேவைகளை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டு ஒரே நேரத்தில் தேவையான அனைத்து இடுபொருட்களை குறைந்த விலையில் பெறலாம்.

வேர்க்கடலையை அப்படியே விற்காமல் மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று கூடுதல் லாபம் பெறலாம்.

முதலில் வேர்க்கடலையை விவசாய குழு தேர்வு செய்து பயிரிட்டு லாபம் ஈட்டி வந்தனர். வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலைமிட்டாய், கடலை எண்எண்ெணய் மற்றும் பல வகையான பொருட்கள் மனித வாழ்க்கையோடு இணைந்த உணவு முறையாக உள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். வேர்க்கடலை மீண்டும் இங்கேயே விற்பனைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

வேர்க்கடலையின் சிறப்புகள், மதிப்புகூட்டு பொருட்கள், சந்தைவாய்ப்புகள், விளைச்சல் போன்றவை குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் வேர்க்கடலை உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள செயல்களில் ஈடுபட்டுள்ள சுமார் 150 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளீர்கள்.

அதேபோல இத்தொழில் அனுபவம் வாய்ந்த உள்ளூர் வர்த்தகர்கள், வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள் வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளனர்.

இ்வ்வாறு அவர் பேசினார்.

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட அலுவலர் திருமேனி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்