மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

திருப்பனந்தாள் அருகே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-11 23:15 GMT
திருப்பனந்தாள்,

தஞ்ைச மாவட்டம் கும்பகோணம் அருேக உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி குறித்து ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.

எதிர்ப்பு

தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார்.

இயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

வழக்குப்பதிவு

எனவே இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மகேஸ்வரனிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்