தூத்துக்குடியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

Update: 2019-06-12 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.

கலெக்டர் அலுவலகம் 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மரகதநாதன் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசிக்க, அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) இளங்கோ, தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் ஆதிநாராயணன், திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் 

இதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் உமையொருபாகம், சிவக்குமார், கிறிஸ்டி, மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்