நெல்லையில் இருந்து மாஞ்சோலைக்கு பஸ் வழக்கம்போல் இயங்கியது

நெல்லையில் இருந்து மாஞ்சோலைக்கு பஸ் வழக்கம்போல் இயங்கின.

Update: 2019-06-12 21:30 GMT
அம்பை, 

நெல்லையில் இருந்து மாஞ்சோலைக்கு பஸ் வழக்கம்போல் இயங்கின.

சகதிக்காடாக மாறிய சாலை 

அரசு போக்குவரத்துக்கழக பாபநாசம் கிளை பணிமனை சார்பில் நெல்லையில் இருந்து மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக ஊத்து கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவிக்கு மேல் உள்ள தலையணை வரை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அந்த பகுதியில் செம்மண் மற்றும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தார் போடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தற்போது அங்கு பெய்து வரும் மழையால் ரோடு சகதிக்காடாக மாறியது.

பஸ் இயங்கியது 

இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதாகவும், டிரைவர்கள் பஸ்சை இயக்குவதற்கு பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாஞ்சோலை ஊத்துக்கு பஸ் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக பாபநாசம் கிளை பணிமனையில் இருந்து மாஞ்சோலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேயிலை தோட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகளிடம் போக்குவரத்து தொடர்ந்து நீடிக்க கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே மாஞ்சோலையில் மழையின் அளவு குறைந்தது. அதனால் போக்குவரத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதனால் நேற்று அந்த பஸ் வழக்கம்போல் இயங்கியது. 

மேலும் செய்திகள்