அணியாபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.9½ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

அணியாபுரத்தில் நடந்த சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.9½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2019-06-13 22:30 GMT
மோகனூர், 

மோகனூர் தாலுகா அணியாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து முறைசார் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சிறப்பு பயிற்சி மையங்களில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினர்.

மேலும் 173 பயனாளிகளுக்கு ரூ.9.55 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் நாமக்கல் உதவி கலெக்டர் கிராந்தி குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர், விஜயலட்சுமி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், வேளாண்மை அலுவலர் சுரேஷ், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கந்தசாமி, மோகனூர் தாசில்தார் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்