ராமநாதபுரத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-14 23:00 GMT
ராமநாதபுரம்,

கொல்கத்தாவில் கடந்த 12-ந் தேதி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்படி இந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் டாக்டர் கலிலூர் ரகுமான் முன்னிலை வகித்தார். இதில் சங்க பொருளாளர் டாக்டர் மனோஜ்குமார், மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் முத்தரசன், முதுநிலை துணை தலைவர் மலையரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச்சையின்போது நோயாளிகளின் இறப்பிற்கு டாக்டர்களை காரணம் காட்டி தாக்குவதும், ஆஸ்பத்திரிகளை சேதப்படுத்துவதும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து டாக்டர்களை காப்பதற்கு மத்திய,மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றி உயிர்களை காக்கும் டாக்டர்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்