விகே பாட்டீல் ராஜினாமா: சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பாலாசாகேப் தோரட் நியமனம்

ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பாலாசாகேப் தோரட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-15 00:15 GMT
மும்பை, 

காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் அகமது நகர் தொகுதியை காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்காததால் அதிருப்தியில் கட்சியை விட்டு விலகினார். அதுமட்டும் இன்றி பா.ஜனதாவில் இணைந்த அவர் மறுக்கப்பட்ட அதே அகமதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இந்த தேர்தலில் மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனது சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் அவரும் பா.ஜனதா கட்சியில் இணையப்போவதாகவும், மந்திரி பதவி கிடைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேநேரம் வரும் 17-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதால் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சட்டசபை புதிய எதிர்க்கட்சி தலைவராக பாலாசாகேப் தோரட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சட்டசபையில் துணை தலைவராக உள்ள விஜய் வெட்டிவார் குழு தலைவராக உயர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்