பெரம்பலூரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூரில் நடைபெற்ற ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தி‌ஷாமித்தல் தொடங்கி வைத்தார்.

Update: 2019-06-15 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தி‌ஷாமித்தல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஹெல்மெட் அணியாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்...

பாலக்கரையில் தொடங்கிய ஊர்வலம், ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நித்யா, பெரம்பலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்