சென்னையில் என்கவுண்ட்டர்: ரவுடி உடல் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் தகனம்

சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடல் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2019-06-16 22:30 GMT
செந்துறை,

சென்னை வியாசர்பாடி தேசிய ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மகன் வல்லரசு(வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாமிக்கண்ணு, வியாசர்பாடியில் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு மாதவரம் சீதாபதி 19-வது தெருவில் வசித்து வருகிறார். அவருடன் வல்லரசு வசித்து வந்தார்.

பிரபல ரவுடியான வல்லரசு, வடசென்னையை கலக்கி வரும் எண்ணூர் தனசேகரின் முக்கிய கூட்டாளி ஆவார். வல்லரசுவின் கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கதிர் என்கிற கதிரவன்(33). இவர் வல்லரசுடன் சேர்ந்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

தகனம்

இதேபோல் வல்லரசுவின் மற்றொரு கூட்டாளி பெரம்பூரை சேர்ந்த கார்த்திக்(23). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வியாசர்பாடி பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போலீசாரை வெட்டியதை தொடர்ந்து, வல்லரசு என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சாமிக்கண்ணுவின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி காலனித்தெரு ஆகும். இதனால் வல்லரசுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்