மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணி வாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2019-06-17 12:05 GMT
ஒளிபரப்பு பொறியியல் சார்ந்த நிறுவனம் பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. மத்திய அரசு நிறுவனமான இது, ஒப்பந்த அடிப்படையில் திறன் சார்ந்த (ஸ்கில்டு) மற்றும் திறன் சாராத பணியிடங்களுக்கு தகுதியானவர்களை சேர்க்க விண்ணப்பம் கோரி உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 1100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் திறன் சார்ந்த பணிகளுக்கு 400 இடங்களும், திறன் சாராத பணிகளுக்கு 700 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்.

திறன் சார்ந்த பணிகளுக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். திறன் சாராத பணிகளுக்கு 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரிக்கல், வயர்மேன் போன்ற ஐ.டி.ஐ. படிப்புகளை படித்தவர்கள் திறன் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓராண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் திறன் சாராத பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 செலுத்தினால் போதுமானது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து வருகிற 24-ந்தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதே நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், லேப் அட்டண்டன்ட், வரவேற்பாளர், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட அலுவலக பணி களுக்கு 278 பேரை தேர்வு செய்ய மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8,10,12-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் பி.சி.ஏ., பி.காம் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். தபால் மூலமாக விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் ஜூன் 30-ந்தேதியாகும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்