பட்டுக்கோட்டையில் அரசு டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்

பட்டுக்கோட்டையில் நேற்று அரசு டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 22:15 GMT
பட்டுக்கோட்டை,

கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மருத்துவக்கழகம் சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களை சேர்ந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய மருத்துவக்கழக மாநில துணைத்தலைவர் ஏ.அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பூங்கோதையை சந்தித்து மனு அளித்தனர். அதில், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தனியார் மருத்துவமனைகள்

கொல்கத்தாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் நேற்று முற்றிலும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்