பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருக்குவளையில், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருக்குவளையில், விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி மறியல் கைவிடப்பட்டது.

Update: 2019-06-19 22:45 GMT
வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே வடக்குப்பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், சாட்டியக்குடி, அணக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2017-18-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். இந்த தொகை விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரியும் திருக்குவளை கடைத்தெருவில் நேற்றுமுன்தினம் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை தாசில்தார் (பொறுப்பு) இளங்கோவன், நாகை சரக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சரவணகோபாலன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டா ஜெயந்தி ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்