முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-23 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த நபர்களுக்கு திருமண நிதி உதவி, முதியோர் உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி, விபத்து நிதியுதவி போன்ற நிதி உதவிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்தத் துறையின் மூலமாவது கல்விக்காக உதவித் தொகை பெற்றாலும் கூட இந்த திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் பல்தொழில் நுட்ப பயிற்சி, கவின் கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப் படிப்பு, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கவின் கலையில் இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு கல்வி உதவித் தொகையினை கூடுதலாக பெறலாம்.

விண்ணப்பிக்கலாம்

எனவே தகுதி வாய்ந்த மாணவர்கள், உடனடியாக தங்கள் கல்வி நிர்வாகத்தின் வழியாகவோ அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் உள்ள சமூகபாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார்கள் மூலமாக மனு அளித்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்