பத்ம விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்

பத்ம விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-06-25 22:15 GMT
திருவள்ளூர்,

குடியரசு தின விழா அன்று வழங்கப்படும் பத்ம விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினவிழா அன்று பத்ம விருதை மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. பத்ம விருது என்பது பத்மவிபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை உள்ளடக்கியதாகும். மத்திய அரசானது நமது தேசத்திற்கு நற்பெயரையும் புகழையும் ஈட்டித்தந்து பல்வேறு துறைகளில் தன்னலமிக்க பொதுச்சேவை ஆற்றியவர்களுக்கு குடியரசு தினத்தன்று இந்த விருதுகளை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய இணையதள முகவரி www.padmaawards.gov.in ஆகும். விண்ணப்ப படிவங்களை இதன்மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருத்துருக்கள், விளையாட்டுகள் சம்பந்தப்பட்டதாக இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116ஏ, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை என்ற முகவரிக்கு வருகிற 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 044-27666249 மற்றும் 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்