புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெறக்கோரி நகலை எரித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெறக்கோரி நாகையில் நகலை எரித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-25 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் கலைக்கல்லூரியில், நேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெறக்கோரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகி தமிழரசன் முன்னிலை வகித்தார்.

 புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டிப்பது.


புதிய கல்வி கொள்கையால், ஆசிரியர், பேராசிரியர்களின் பணியை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையின் நகலை தீவைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்