தனியார் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 43 பேருக்கு பணி ஆணை

திருச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் 43 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

Update: 2019-06-26 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத்தினாளிகள் 197 பேர் கலந்து கொண்டனர். 7 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் வேலைவாய்ப்பிற்காக வந்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குனர் சுப்பிரமணியன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரையும், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தவர்களும் பங்கேற்றனர்.

43 பேருக்கு பணி ஆணை

இந்த முகாமில் நேர்காணலில் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய 43 பேருக்கு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 3 பேர் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 21 பேர் காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்கள் ஆவார்கள். மற்றவர்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சிறிதளவோ அல்லது முழுமையாகவோ குறைபாடு உள்ளவர்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்