தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக்கூடம், தடுப்பணை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் உள்பட 27 வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-26 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் சிட்டிலரை, சேருகுடி, ஆராய்ச்சி, மகாதேவி, பிள்ளாப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 34 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல், கால்நடை தொட்டி அமைத்தல், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சிக்கூடம், தடுப்பணை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுதல், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் உள்பட 27 வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பணிகள் அனைத்தும் தரமானதாகவும், உரிய காலத்திற்குள் முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், மணிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியளர்கள் சுப்ரமணியம் (ஊரக வளர்ச்சிகள்), பாலசுந்தரம் (சாலைகள் மற்றும் பாலங்கள்), மாவட்ட ஊராட்சி அலுவலக செயலர் சண்முகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்