ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்: பண பரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல் தொடர்பாக பணபரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-26 22:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் தொழிலாளர் சேமநலநிதி பணத்தில் இருந்து ரூ.78 லட்சத்தை கையாடல் செய்ததாக திருக் கோவிலில் பணியாற்றி வந்த தற்காலிககணினி பணியாளர் சிவன் அருள்குமரன் மீது கோவிலின் இணை ஆணையர் கல்யாணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவர், இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் திருக்கோவில் அலுவலகத்தில் உள்ள கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் கையாடல் விவகாரத்தில் திருக்கோவிலில் பணியாற்றும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் பணம் கையாடல் செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக கணினி பணியாளர் சிவன்அருள்குமரன் ஆன்லைன் மூலம் யார் யாரின் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.செல்போனில் யார் யாருடன் அதிக முறை பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும்,தகவல்களையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்