வலங்கைமானில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

வலங்கைமானில், ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2019-07-03 22:45 GMT
வலங்கைமான்,

வலங்கைமான் பகுதியில் உள்ள கும்பகோணம்-மன்னார்குடி மெயின் சாலை, மகாமாரியம்மன் கோவில், கடைத்தெரு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில் சாலையை ஆக்கிரமித்த கொட்டகைகள், கட்டிட பகுதிகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. விளம்பர பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தன், வலங்கைமான் உதவி பொறியாளர் முத்துக்குமரன், சாலை ஆய்வாளர்கள் சுபாராணி, முருகானந்தம், கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும். விதிமுறைகளை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்வதை இனிவரும் காலங்களில் அனுமதிக்க மாட்டோம்.

ஆக்கிரமிப்பு செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

மேலும் செய்திகள்