ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் இயக்குனர் கவுதமன் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு இயக்குனர் கவுதமன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-06 23:00 GMT
தஞ்சாவூர்,

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை எமனாக நினைத்து கடுமையாக எதிர்த்து வருகிறோம். ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்த ஏலம் விடப்பட்டு வருகிறது.

மக்களை பாதிக்கக்கூடிய திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அரசாணை வெளியிட்டார். எனவே தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு எடுத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராக சிறப்பு சட்டத்தை சட்டசபையில் இயற்ற வேண்டும். காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்பவர்களை சிறைபிடிப்போம். வைகோவுக்கு 1 ஆண்டு தண்டனை என்பது கருத்துரிமைக்கு எதிரானது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினிக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு 6 மாதம் வழங்கியிருக்க வேண்டும். மதுவுக்கு எதிராக போராடிய நந்தினிக்கு உடனே ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்