மின்திருட்டில் ஈடுபட்ட ஆலை உரிமையாளருக்கு 2 ஆண்டு கடுங்காவல் ; ரூ.1¼ கோடி அபராதம்

மின்திருட்டில் ஈடுபட்ட பிளாஸ்டிக் ஆலை உரிமையாளருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1¼ கோடி அபராதமும் விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2019-07-06 23:00 GMT
தானே,

தானே அருகே சீல் மகாபேவை சேர்ந்தவர் அபுதாலிப் கான் (வயது57). பிளாஸ்டிக் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலை மின் திருட்டில் ஈடுபடுவ தாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி அவரது ஆலைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மின் திருட்டு நடந்தது தெரியவந்தது. மேலும் 34 மாதங்களில் ரூ.52 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் மின்சாரம் திருடப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மும்ரா போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அபுதாலிப் கானை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது.

இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமாக ரூ.1 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்