ஊருணி சேற்றில் சிக்கி பள்ளி மாணவன் பலி; குளிக்க சென்றபோது பரிதாபம்

குளிக்க சென்றபோது அரசு பள்ளி மாணவன் ஊருணி சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2019-07-08 00:15 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள பனைக்குளத்தை சேர்ந்தவர் மூமின்கான். இவருடைய மகன் முகமதுயூசுப்(13) பனைக்குளம் பகுருதீன் அரசு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை தினத்தையொட்டி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து தட்டான் ஊருணிக்கு குளிக்க சென்றுள்ளான். அங்கு தண்ணீரில் இறங்கிய முகமதுயூசுப் சேற்றில் சிக்கி புதைந்து உயிருக்கு போராடி சத்தம்போட்டான். இதையடுத்து உடன் சென்றவர்களும் உதவிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து முகமது யூசுப்பை மீட்டனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி பனைக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக் கு கொண்டு சென்றனர். எனினும் முகமது யூசுப் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முகமது யூசுப்புடன் படித்த மாணவர்கள், அவனது உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் செய்திகள்