டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (IOCL) என அழைக்கப்படுகிறது.

Update: 2019-07-08 10:36 GMT
தற்போது ஹால்தியாவில் உள்ள இதன் கிளை சுத்திகரிப்பு நிலையத்தில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட்/ ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் குவாலிட்டி கண்ட்ரோல் அனலிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புரொடக்சன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேசன், பயர் அண்ட் சேப்டி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-6-2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள். பி.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல்) பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், பயர்சேப்டி படித்து, கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜூலை 23-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 4-8-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.iocl.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்