தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 13-ந் தேதி நடக்கிறது

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.

Update: 2019-07-08 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 13-ந் தேதி(சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கிறது. இதில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், தொழிற்கல்வி, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயவிபர குறிப்பின் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.

முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளவும், பதிவு செய்து கொள்ளவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அரங்கு அமைக்கப்பட உள்ளது. இளைஞர்கள் தொழில்திறனை வளர்த்து கொள்ள இலவச திறன் எய்தும் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. முகாமிற்கு வருகை தரும் நபர்கள் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கூடுதல் பதிவு பணிகளை செய்து கொள்ளலாம். எனவே இளைஞர்கள் நம்பிக்கையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்