சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் 2 மாதத்துக்குள் சீரமைக்கப்படும் தளவாய்சுந்தரம் தகவல்

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் 2 மாதத்துக்குள் சீரமைக்கப்படும் என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

Update: 2019-07-10 23:00 GMT
சுசீந்திரம்,

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுவதாகவும், பாசிபடர்ந்து மாசடைந்துள்ளதாகவும், இதனை சரிசெய்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துறை மூலம் குழு அமைத்து ஆய்வறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்னும் 2 மாதங்களுக்குள் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும். சுசீந்திரம் பழையாறு குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள சண்டிகேஸ்வரர் சிலை பழுதடைந்துள்ளதால் அதற்கு மாற்றாக புதிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பால்வளத்துறை தலைவர் எஸ்.ஏ.அசோகன், ஆரல்வாய்மொழி கூட்டுறவு சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், கவிஞர் சதாசிவம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக தெப்பக்குளம் தொடர்பாக அதிகாரிகளுடன் தளவாய் சுந்தரம் ஆலோசனை செய்தார். இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவிக்கோட்ட பொறியாளர் மோகனதாஸ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், செயல் அலுவலர் சத்தியதாஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது கோவில் நிர்வாகம் சார்பில் தெப்பக்குளத்தின் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்