திருவையாறு தியாகராஜர் சமாதியில் துபாய் வாழ் இந்திய மாணவர்கள் இசை அஞ்சலி

திருவையாறு தியாகராஜர் சமாதியில் துபாய் வாழ் இந்திய மாணவர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-07-11 22:30 GMT
திருவையாறு,

கர்நாடக இசை, பரதநாட்டியம், குச்சுப்புடி, கதகளி உள்ளிட்ட கலைகளை பயின்ற துபாய் வாழ் இந்திய மாணவர்கள் 28 பேர் துபாயை சேர்ந்த நடன ஆசிரியை விம்மிஈஸ்வர் தலைமையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.

கடந்த 9-ந் தேதி இந்தியா வந்த இவர்கள், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதியில் இசை அஞ்சலி செலுத்த திட்டமிட்டனர். அதன்படி திருவையாறில் உள்ள தியாகராஜர் சமாதிக்கு வந்த அவர்கள், பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சி குறித்து நடன ஆசிரியை விம்மி ஈஸ்வர் கூறியதாவது:-

பாரம்பரிய நடன கலைகள்

கலைகளின் பிறப்பிடம் இந்தியா தான். நாம் கற்கும் கலைகள் எங்கு பிறந்தன? என்பதை அறிய மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளேன். முன்னதாக கேரள அரசின் உதவியுடன் மாணவர்களுக்கு கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நடன கலைகள் குறித்து விளக்கம் அளித்தோம். தற்போது திருவையாறு தியாகராஜர் சமாதியில் இசை அஞ்சலி செலுத்தி உள்ளோம். இதன் மூலமாக இசையின் உண்மையான அர்த்தங்களை மாணவர்களால் உணர முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்