பாளையங்கோட்டையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க கோரிக்கை

டாக்டர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பாளையங்கோட்டையில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-07-12 22:15 GMT
நெல்லை, 

டாக்டர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பாளையங்கோட்டையில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வமுருகன் முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோரிக்கைகள்

டாக்டர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்கவேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்தவேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் பாலசுப்பிரமணியன், சுதன், அமலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்