கொசஸ்தலை ஆற்றங்கரையில் பாழடைந்த உதவி பொறியாளர் அலுவலகம்

பொன்னேரி அருகே ஜெகநாதபுரம் கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த கொசஸ்தலை ஆறு உபவடிநிலக் கோட்டம் நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

Update: 2019-07-15 21:45 GMT
பொன்னேரி,

இந்த ஆற்றின் இருபுறங்களில் கரைகளை பாதுகாக்கவும், ஆற்று மணல் திருட்டு மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர் அலுவலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கொசஸ்தலை ஆற்றின் கரையில் கட்டப்பட்டது.

இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அலுவலகத்தை பொதுப் பணித் துறை அதிகாரிகள் யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இக்கட்டிடம் தற்போது புதர் மண்டிய நிலையில், சமூக விரோதிகள் நடமாடும் இடமாக மாறி உள்ளது. அரசு பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் ஆதங்கம் அடைகின்றனர்.

எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து, இங்குள்ள ஆற்று ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக விடுக்கின்றனர்.

மேலும் செய்திகள்