வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-16 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் 112 முகாம்கள் ஜூலை 15-ந்தேதி முதல் வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவமனைக்கு தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்களைத் தேர்வு செய்து அங்குள்ள கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தந்த கிராமத்திலேயே வழங்குவது இந்த முகாம்களின் நோக்கமாகும்.

இந்த முகாம்கள் மூலம் மருத்துவக்குழுவினர் குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் மற்றும் நீண்ட நாட்கள் சினை பிடிக்காத மாடுகளை கதல் ஒளி மூலம் ஆய்வு செய்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைவழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற மருத்துவ முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீவனங்கள்

பின்னர் கால்நடை வளர்ப்போருக்கு அசோலா தீவனங்கள், தாது உப்புகள், தீவனப்புல் கரனைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் உதவி இயக்குநர்கள் முரளிதரன், செந்தில்முத்துகுமரன், உமாசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்