மாமல்லபுரம் மீனவர்களின் வலையில் சிக்கிய 9 டன் மீன்கள் ரூ.10 லட்சத்துக்கு விலை போனது

மாமல்லபுரம் மீனவர்களின் வலையில் 9 டன் மீன்கள் சிக்கின. இந்த மீன்கள் ரூ.10 லட்சத்துக்கு விலைபோனது.

Update: 2019-07-17 23:00 GMT

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10–க்கும் மேற்பட்ட படகுகளில் மாமல்லபுரம் கடலில் இருந்து 40 கி.மீ. தூர ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். அங்கு ஒரே இடத்தில் மீனவர்கள் வலை விரித்து மீன்பிடிக்க தொடங்கினர்.

9 படகுகளில் இருந்து வீசப்பட்ட வலைகளில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. வலையில் சிக்கிய மீன்களை அவர்கள் கரைக்கு கொண்டு வந்து பார்த்தனர்.

இந்த மீன்களின் மொத்த எடை 9 டன். இந்த மீன்கள் ரூ.10 லட்சத்துக்கு விலை போனது.

ஒரே இடத்தில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இதுவரை மீனவர்கள் கரைப்பகுதியில் சிறிய வகை மீன்களையே பிடித்து வந்தனர். ஆழ்கடல் பகுதிக்கு செல்லும்போது ஆண்டுக்கு ஏதாவது ஒரு முறைதான் இதுபோன்று ஒரே இடத்தில் நிறைய மீன்கள் பிடிபடுவது வழக்கம் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

சில நேரங்களில் மீன்கள் கிடைக்காமல் வெறும் படகுடனும் மீனவர்கள் கரைக்கு திரும்புவதும் உண்டு.

மேலும் செய்திகள்