திருவள்ளூரில் சிறு, குறு தொழில் தொடங்க கடன் உதவி முகாம்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு, குறு தொழில் தொடங்க சிறப்பு கடன் உதவி முகாம் திருவள்ளூரில் நடைபெற்றது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

Update: 2019-07-19 22:15 GMT
திருவள்ளூர்.

இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் எம். கே.பட்டாச்சாரியா, திட்ட இயக்குனர் ஜெயக்குமார், கள பொதுமேலாளர் சந்திரா ரெட்டி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வெங்கடேசன், பூந்தமல்லி மண்டல துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், முதுநிலை மேலாளர்கள் விவேகானந்தன், ஞானமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த சிறப்பு கடனுதவி முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்தியன் வங்கி கிளைகள் மூலம் 367 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.23 கோடியே 73 லட்சம் கடன் தொகையையும், யூனியன் வங்கி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு கடன் உதவித் தொகையையும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார். இதில் திரளான வங்கி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்