நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர பிரசுரங்கள்

நெய்தலூர் காலனி அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர பிரசுரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-19 22:45 GMT
நச்சலூர்,

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவரில் சிலர் விளம்பர பிரசுரங்களை ஏராளமாக ஓட்டி வைத்துள்ளனர். இதனால் பள்ளிபோல் இல்லாமல் தனியார் கட்டிடம் போல் பள்ளி காட்சியளித்து வருகிறது. இதனால் தினமும் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் கவனம் அந்த பிரசுரங்களால் பாதிக்கப் படுகிறது.

மேலும் சிலர் சுற்றுச்சுவரில் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற சம்பவங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக பள்ளியின் சுற்றுச்சுவரில் விளம்பர பிரசுரங்கள் ஒட்டும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுச்சுவரை சுற்றிலும் ஓவியங்களை வரைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்