பக்கவாத நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த பலூன்களை பறக்க விட்ட நரம்பியல் நிபுணர்கள்

தமிழ்நாடு நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஞானேஸ்வரன் தலைமை தாங்கினார்.

Update: 2019-07-21 22:15 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நரம்பியல் மருத்துவ நிபுணர்களின் 3 நாள் மாநாடு நடந்தது. இதற்கு தமிழ்நாடு நரம்பியல் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஞானேஸ்வரன் தலைமை தாங்கினார். நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சங்கரநாராயணன், டாக்டர் பாலாஜி முன்னிலை விகித்தனர். நரம்பியல் துறையில் பக்கவாத நோய்க்கு அளிக்கப்படும் எளிய சிகிச்சை முறைகள் குறித்தும், இந்த நோய் பற்றி அறிந்தவுடன் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடையலாம் என்றும் விளக்கி கூறப்பட்டது.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பக்கவாத நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள புல்வெளி மைதானத்தில் நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் துறை மருத்துவ மாணவர்கள், பள்ளி குழந்தைகள் பங்கேற்று பலூன்களை பறக்க விட்டனர்.

மேலும் செய்திகள்