திருக்கழுக்குன்றம் அருகே கத்திமுனையில் நகை-பணம் பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த நிறுவனம் ஏற்பாடு செய்த பஸ்சில் ஒரகடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.

Update: 2019-07-21 22:15 GMT
கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த நெரும்பூர் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மகேந்திரவர்மன் (வயது 22). காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து அந்த நிறுவனம் ஏற்பாடு செய்த பஸ்சில் ஒரகடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். திருக்கழுக்குன்றம் சட்ராஸ் நெரும்பூர் இணைப்பு சாலையில் நள்ளிரவு 1½ மணிக்கு வந்த அவர் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி உதவி கேட்டார். நண்பர் வரும் வரை தனியாக அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ இவரது அருகில் நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்தவர், திடீரென மகேந்திரனை கத்திமுனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த 2½ சவரன் நகை மற்றும் ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து மகேந்திரவர்மன் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உஷார் அடைந்த போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் அந்த ஆட்டோ நிற்காமல் வேகமாக சென்றது. அதனை பின் தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தீவிர விசாரணையில், கத்தி முனையில் நகை, பணம் பறித்தவர் மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த சிவக்குமார் (38) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து நகை, பணம், ஆட்டோவை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்