ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மூலம் குடிநீர் வினியோகம்

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பொதுமக்களுக்கு நகராட்சி வாகனங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2019-07-21 22:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகரில் தாமிரபரணி தண்ணீர் மூலம் குடிநீர் வினியோகம் நகராட்சி மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடும் வறட்சி, கொளுத்தும் வெயில் மற்றும் பல்வேறு காரணங்களால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு லாரி உள்ளிட்ட நகராட்சி வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என சந்திரபிரபா எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நகராட்சி லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியகுடி தெரு மற்றும் பேட்டை கடைத்தெரு உள்பட பல்வேறு முக்கிய தெருக்களில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்