விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்

முன்னாள் மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று திட்டக்குடி- அரியலூர் சாலையில் பள்ளி வளாகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 22:45 GMT
குன்னம்,

குன்னம் அருகே உள்ள துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி நேற்று திட்டக்குடி- அரியலூர் சாலையில் பள்ளி வளாகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டதாகவும், இதற்கு முன்பு படித்த எங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்றும் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த துங்கபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி, குன்னம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திட்டக்குடி- அரியலூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்