துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தல்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்று அரசு பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-07-22 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் முத்துக்குமார், துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துராமன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அறவாழி, நிர்வாகிகள் பாலுச்சாமி, பிச்சைமுத்து, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2003-ம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்து ஓய்வு பெறும் அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்க ளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் திருவள்ளுவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்