வேங்கன் ஏரியில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

வேங்கன் ஏரியில் வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் கூறினார்.

Update: 2019-07-23 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்திலுள்ள வேங்கன் ஏரியினை வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் முறையாக சர்வே செய்து கணக்கெடுத்தப்பின், இந்த ஏரியில் கரைகள் அமைத்து பலப்படுத்தும் பணி, சீரமைப்பு பணிகள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு பருவமழை காலங்களில் ஏரி முழுவதும் மழை நீர் சேகரிக்கப்பட்டு, விவசாயம் செழிக்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் ஏரியினை சீர்செய்யும் விதமாக ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்களை தங்களது விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்